மக்களவை தேர்தலில் வேட்பாளர்கள் கட்டாயம் செய்யக் கூடாத சமூகவலைத்தள விஷயங்கள் என்னனு தெரியுமா

தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்குவதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
சமூக வலைத்தள பிரச்சார நிபந்தனை....
தேர்தல் பிரச்சாரத்தை சமூக வலைத்தளங்களிலும் செய்யலாம் என்று நினைத்திருக்கும் வேட்பாளர்களுக்கு சில நிபந்தனைகளை பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் மற்றும் வாட்ஸ் ஆப் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. தேர்தல் நிறைவடையும் வரை வேட்பாளர்கள் இந்த செயல்களை சமூக வலைத்தளம் மூலம் கட்டாயம் செய்யக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


1, அனைத்து வேட்பாளர்களும் தங்களின் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் சமூகசமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2, பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இடுகையிடப்படும் எந்த அரசியல் விளம்பரங்களாக இருந்தாலும், முன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3, அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்களைக் கூகுள், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் யூடியூப் இல் வெளியிடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4, வேட்பாளர்கள் தங்கள் ஒட்டுமொத்த தேர்தல் செலவு கணக்குகளில், சமூக ஊடக விளம்பரங்களுக்காகச் செய்யும் அனைத்து செலவுகளையும் சேர்க்க வேண்டும் என்று கண்டிப்பான முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
5, பிரச்சார நோக்கத்திற்காக சமூக ஊடகங்களில் எந்தவொரு அரசியல் கட்சியும், எந்த ஒரு வேட்பாளரும் பாதுகாப்புப் பிரிவின் புகைப்படங்களைக் பயன்படுத்தக் கூடாதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
6, சமூக வலைத்தள விதிமுறைகளை மீறுவதைக் கண்காணிக்க மற்றும் அதன் தொடர்பான புகார்களை எடுப்பதற்குப் புதிதாய் ஒரு கவனிப்பு குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
7, பேஸ்புக், கூகுள், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்கப் பேச்சு, போலி செய்தி போன்றவற்றைப் பதிவு செய்தல் கூடாது என்றும், மீறினால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
8, பேஸ்புக், டிவிட்டர் அல்லது கூகிள் ஆகியவற்றில் வெளியிடப்படும் அனைத்து அரசியல் விளம்பரங்களும் ஐடி      ஊடகங்களின் விவரங்களைச்நிறுவனங்களின் மூலம் சிறப்பாக வெளியிடப்படும்.
9, வாட்ஸ் ஆப் தொடர்பான எந்த விதிமுறைகளும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது