இவ்வாண்டு முதல், சீனப் பொருளாதாரம் சீராக வளர்ந்து வரும் நிலையில், சிற்சில ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் இன்று வியாழக்கிழமை போஆவ் நகரில் தெரிவித்தார். நிலையான சொத்துகளுக்கான முதலீடு அதிகரிப்பு, நுகர்வோரின் நம்பிக்கை குறியீடு மற்றும் உற்பத்தித் தொழில்களின் புதிய முன்பதிவுகளின் எண்ணிக்கை ஏற்றம் ஆகியவை முதல் 2 மாதங்களில் காணப்பட்டுள்ளன. குறிப்பாக, மார்ச் திங்களில், தினமும் மின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டு அளவின் அதிகரிப்பு விகிதம் தலா 10விழுக்காட்டுக்கும் மேலாகும். சரக்குப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விரைவாக அதிகரித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
சீனப் பொருளாதார வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான மாற்றம்